Published : 30 Apr 2024 05:25 AM
Last Updated : 30 Apr 2024 05:25 AM

ஈரோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது

ஈரோடு தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் நேற்று கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்த ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராஜ கோபால் சுன்கரா.

ஈரோடு: ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒரு கேமரா பழுதடைந்தது தொடர்பாக ஆட்சியரும், மாவட்ட தேர்தல்அலுவலருமான ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், 221 கேமராக்கள்பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த ஒரு கண்காணிப்பு கேமரா நேற்று முன்தினம் இரவு திடீரென பழுதடைந்தது. பின்னர், அது சரி செய்யப்பட்டது.

அங்கு நேற்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வாக்கு எண்ணிக்கை மையத்தில்பழுதான ஒரு கேமரா, ஒரு மணிநேரத்தில் சரி செய்யப்பட்டுவிட்டது. எனினும், பழுது ஏற்படவெப்பநிலை காரணம் அல்லகேமரா பதிவுகள் 3 மாதத்துக்குபாதுகாப்புடன் வைத்திருக்கப்படும்” என்றார்.

இது தொடர்பாக அமைச்சர் சு.முத்துசாமி கூறும்போது, “ஒரு கேமரா 26 நிமிடங்கள் பழுதடைந்தது தொடர்பாக, திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x