Published : 26 Apr 2024 04:37 AM
Last Updated : 26 Apr 2024 04:37 AM
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்னும் 4 நாட்களுக்கு (ஏப்.29 வரை) வெப்பநிலை வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும். உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாகலாம்.
சென்னை, புறநகரில் வெப்பநிலை 79 டிகிரி முதல் 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும். இன்று முதல் 28-ம் தேதி வரை குமரி, நெல்லை மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT