

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு அமமுகவினர் சிறப்பாக பாடுபட்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் வெற்றியை மட்டுமே இலக்காக நிர்ணயித்து அனைத்து கூட்டணிக் கட்சியை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் களப்பணி ஆற்றியுள்ளனர். அவர்களுக்கு தோளோடு தோள் நின்று அமமுகவினரும் தீவிர களப்பணியாற்றி இருக்கின்றனர். அவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.