Published : 20 Apr 2024 07:56 PM
Last Updated : 20 Apr 2024 07:56 PM

தமிழகத்தில் 69.46% வாக்குகள் பதிவு: 2019-ஐ விட 3.01% குறைவு | இறுதி நிலவரம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், இறுதியாக 69.46 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது, 72.47% வாக்குகள் பதிவான கடந்த 2019 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது 3.01 சதவீத குறைவு ஆகும்.

தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் மக்களவைத் தேர்தல் வெள்ளிக்கிழமை அமைதியாக நடந்து முடிந்தது. இரவு 7 மணி நிலவரப்படி, 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்பின், நள்ளிரவு 12 மணிக்கு வெளியான தகவலில், தமிழகத்தில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் 69.46 என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், 7 மணி நிலவரப்படி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 70.93% வாக்குகள் பதிவாகியிருந்ததாக கூறப்பட்டிருந்தது. ஆனால், நள்ளிரவில் வெளியிடப்பட்ட பட்டியலில், அந்த தொகுதியில் 59.96% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஸ்ரீபெரும்புதூர், சிவகங்கை, கோவை உள்ளிட்ட பல தொகுதிகளில் 7 மணி நிலவரத்துக்கும் 12 மணி நிலவரத்துக்கும் இடையே வித்தியாசம் காணப்பட்டது.

பொதுவாக வாக்குப்பதிவு முடிந்து அறிவிக்கப்படும் வாக்கு சதவீத அளவுக்கும், இறுதியில் அறிவிக்கப்படும் வாக்கு சதவீத அளவுக்கும் இடையே சற்று ஏற்ற இறக்கம் இருக்கலாம். ஆனால், மத்திய சென்னையில் இரவு 7 மணிக்கு 67.35% வாக்குகள் பதிவாகியிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 12 மணி நிலவரப்படி அந்த சதவீதம் 53.91% என்று அறிவிக்கப்பட்டது. இது, பொதுமக்கள் இடையே குழப்பத்தையும், தெளிவின்மையையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், சனிக்கிழமை வெளியான இறுதி வாக்குப்பதிவு நிலவரத்திலும் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இறுதி நிலவரப்படி தொகுதி வாரியான வாக்குப்பதிவு விபரம்:

திருவள்ளூர் - 68.31%
வட சென்னை - 60.13%
தென் சென்னை - 54.27%
மத்திய சென்னை - 53.91%
ஸ்ரீபெரும்புதூர் - 60.21%
காஞ்சிபுரம் - 71.55%
அரக்கோணம் - 74.08%
வேலூர் - 73.42%
கிருஷ்ணகிரி - 71.31%
தருமபுரி - 81.48%
திருவண்ணாமலை - 73.88%
ஆரணி - 75.65%
விழுப்புரம்- 76.47%
கள்ளக்குறிச்சி - 79.25%
சேலம்- 78.13%
நாமக்கல் - 78.16%
ஈரோடு - 70.54%
திருப்பூர் - 70.58%
நீலகிரி - 70.93%
கோவை - 64.81%
பொள்ளாச்சி -70.70%
திண்டுக்கல் - 70.99%
கரூர்- 78.61%
திருச்சி -67.45%
பெரம்பலூர் - 77.37%
கடலூர் - 72.28%
சிதம்பரம் - 75.32%
மயிலாடுதுறை - 70.06%
நாகப்பட்டினம் - 71.55%
தஞ்சாவூர்- 68.18%
சிவகங்கை - 63.94%
மதுரை - 61.92%
தேனி - 69.87%
விருதுநகர் -70.17%
ராமநாதபுரம் -68.18%
தூத்துக்குடி - 59.96%
தென்காசி - 67.55%
திருநெல்வேலி - 64.10%
கன்னியாகுமரி - 65.46%

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x