Published : 19 Apr 2024 04:09 PM
Last Updated : 19 Apr 2024 04:09 PM

ஹேஷ்டேக் குழப்பத்தால் பேசுபொருளான குஷ்புவின் ‘இந்தியா’ பதிவு!

சென்னை: வாக்களிப்பதை வலியுறுத்தி நடிகை குஷ்பு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு பேசுபொருளாகியுள்ளது. காங்கிரஸில் இருந்து விலகிய பின் பாஜகவில் சேர்ந்து தீவிரமாக இயங்கி வருகிறார் நடிகை குஷ்பு. இந்நிலையில், இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தனது குடும்பத்துடன் சென்னையில் தனது வாக்கினை செலுத்தினார் குஷ்பு.

சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த குஷ்பு, பின்னர் தேர்தல் ஆணையம் வைத்திருந்த தேர்தல் விழிப்புணர்வு செல்பி ஸ்டாண்டில் குஷ்பு தனது கணவருடன் புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், "நாங்கள் எங்கள் கடமையைச் செய்துவிட்டோம். நீங்களும் செய்யுங்கள்" என்று குறிப்பிட்டு #GoAndVote #Duty #Vote4INDIA, #VoteFor400Paar என்ற ஹேஷ்டேக்குளை பதிவிட்டார்.

இதில், #Vote4INDIA என்ற ஹேஸ்டேக்கை கடந்த சில நாட்களாக இண்டியா கூட்டணியினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், குஷ்பும் அதே ஹேஷ்டேக்கை பயன்படுத்தியது, அவர் இண்டியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க்கிறார் என்று சலசலப்பு எழுந்தது.

பாஜக நிர்வாகியாக இருக்கும் குஷ்பு, இந்தத் தேர்தலில் பெரிதாக பாஜகவுக்கு அவர் பிரச்சாரம் செய்யவில்லை. இந்த நிலையில் தான் அவர் இந்த ஹேஷ்டேக் பதிவிட்டது சர்ச்சை எழுந்தது. பாஜக தொண்டர்கள் அவரை விமர்சனம் செய்து அந்த பதிவுக்கு கீழ் கமெண்ட் பதிவிட்டு வரும் அதேவேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் குஷ்புவை கலாய்த்து வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பேட்டியளித்த குஷ்பு, "நான் ஒருபோதும் இண்டியா கூட்டணியை ஆதரித்ததே இல்லை. என்னுடைய நாட்டை குறிப்பிட்டே #Vote4INDIA என்று பதிவிட்டேன். நான் தெளிவாக இருக்கிறேன். குழப்பத்தை விளைவிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இவ்வாறு கூறி வருகின்றனர். நான் இன்னும் பாஜகவில் தான் இருக்கிறேன்." என்று விளக்கம் அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x