Published : 19 Apr 2024 05:04 AM
Last Updated : 19 Apr 2024 05:04 AM

வடதமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்: வெயில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு

சென்னை: வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும். வெயில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஏப்.19) தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும், நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21, 22 தேதிகளில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும், 23, 24 தேதிகளில்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இன்றுவெப்ப அலை வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 9 டிகிரி வரை அதிகரித்து, 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரைஉயரக்கூடும். இதர தமிழக மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக் கூடும்.

வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீன வர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x