Published : 17 Apr 2024 05:58 AM
Last Updated : 17 Apr 2024 05:58 AM
கடலூர்: வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் கட்டுமானப் பணிக்காக அஸ்திவாரம் தோண்டியபோது, அதில் பழங்கால சுவர்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து, தொல்லியல் துறை ஆய்வாளர்கள் இப்பகுதியில் ஆய்வு நடத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வடலூர் வள்ளலார் சத்ய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க அஸ்திவாரம் தோண்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், பெருவெளியில் தைப்பூச நாளில் லட்சக்கணக்கானோர் கூடுவர் என்பதால், இங்கு வள்ளலார் சர்வதேச மையம்அமைக்க எதிர்ப்பு எழுந்தது. இங்கு அஸ்திவாரம் தோண்டப்பட்ட நிலையில், பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
தொல்லியல் துறை ஆய்வு: இதற்கிடையே, ஏற்கெனவே தோண்டப்பட்டுள்ள அஸ்திவாரத்தில், பழங்கால சுவர்கள் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. இந்தசுவர்கள் பழமையான கற்களைகொண்டும், சுண்ணாம்பு கலவையாலும் அமைக்கப்பட்டிருக்காலம் என்று கூறப்படுகிறது.
இந்தப் பகுதியில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு நடத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT