Published : 16 Apr 2024 05:30 AM
Last Updated : 16 Apr 2024 05:30 AM
சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு. மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மேற்கு தொடர்ச்சிமலை மாவட்டங்களில் லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18, 19 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்மிதமான மழையும், 20, 21 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று 104 டிகிரி, நாளை முதல் 19-ம் தேதி வரை 106 டிகிரி, வட தமிழக கடலோரப்பகுதிகள், தென் தமிழகம் பகுதிகளில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT