Published : 16 Apr 2024 06:42 AM
Last Updated : 16 Apr 2024 06:42 AM

“10 ஆடுகளை ஒன்றாக மேயவிட்டால் கூட...” - இண்டியா கூட்டணி மீது அண்ணாமலை விமர்சனம்

திருப்பூர்: கோவை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட புத்தூர், மங்கலம், சுல்தான்பேட்டை, குளத்துக்கடை, சின்னஆண்டிபாளையம், இடுவாய், ஆறுமுத்தாம்பாளையம், கரைப்புதூர், இடுவம்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று பாஜக மாநில தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: இண்டியா கூட்டணி தலைவர்கள் இல்லாத கூட்டணி. பத்து ஆடுகளை ஒன்றாக மேயவிட்டால், தனக்கான தலைவனை அவை தேர்ந்தெடுத்துவிடும். ஆனால் இண்டியா கூட்டணியில் அது முடியவில்லை. பிரதமர் மோடியை தவிர, வேறு யாராவது பிரதமர் பதவியில் அமர்ந்தால், நாட்டை சின்னாபின்னமாக்கி விடுவார்கள்.

பாஜக தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். 4 கோடி மோடி வீடு கட்டிக் கொடுத்துள்ளோம். இன்னும் 3 கோடி மோடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்துச் செல்கிறோம்.

இரவில் மின் தடையை உண்டாக்கி, பணம் பட்டுவாடா நடைபெற்று வருகிறது. நான், கோவை தொகுதிக்கு தனியாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளேன்.

சோமனூரில் ஜவுளிச் சந்தை அமைக்கப்படும். சோலார் மின் தகடுகள் விசைத்தறி, கைத்தறி வைத்திருப்பவர்களுக்கு தருவோம். 100 வாக்குறுதிகளை 500 நாட்களில் நிறைவேற்றிக் காட்டுவேன். திமுகவைப்போல் ஒளிந்துகொண்டு வரமாட்டேன். வாக்குறுதிகளை நிறைவேற்றி கம்பீரமாக வருவேன். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x