Published : 15 Apr 2024 04:13 AM
Last Updated : 15 Apr 2024 04:13 AM

தமிழகத்தில் நாளை முதல் வெப்பநிலை உயர வாய்ப்பு

கோப்புப்படம்

சென்னை: சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு. குமரிக்கடல் மற்றும் அதனைஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 18-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று முதல் 18-ம் தேதி வரை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக்கூடும். நாளை முதல் 18-ம் தேதி வரை உள் மாவட்டங்களில் 106 டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x