Published : 09 Apr 2018 07:27 AM
Last Updated : 09 Apr 2018 07:27 AM

காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மக்களின் உணர்வுகளுக்கு செவிசாய்க்க வேண்டும்: சென்னையில் நடந்த போராட்டத்தில் தமிழ்த் திரையுலகினர் வேண்டுகோள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நியாயமாக போராடும் மக்களின் உணர்வுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்க வேண் டும் என்று தமிழ் திரையுலகினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர் லைட் ஆலையை மூடக் கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத் தில் நேற்று மவுன போராட்டம் நடந்தது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்த போராட்டத்தில் தென்னிந் திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி அமைப்பு, இயக்குநர் கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, சின்னத்திரை நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட திரைப்பட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தை தொடங்கி வைத்த நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசியதாவது:

மக்களுக்கான தேவை, தீர்வு கள் என்ன என்பதை பற்றியெல் லாம் துறை சார்ந்த அறிஞர்கள், வல்லுநர்களை அழைத்து ஒரு நாள் முழுக்க பேச வேண்டும் என்று திட்டமிட்டோம். ஆனால் அது ஈடேறவில்லை. இந்த குறு கிய காலகட்டத்தில், எங்களுக்கு கிடைத்த இந்த சிறிய இடத்தில் நடத்தும் இந்த கண்டன போராட்டத்துக்கு ஆதரவு அளித்த திரையுலகினருக்கு நன்றி.

எதிர்காலத்தில் மூன்றாம் உலகப்போர் வருமென்றால் அது தண்ணீருக்காகத்தான் வரும் என்கிறார்கள் வல்லுநர்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைப் பது மக்களின் நியாயமான உரிமை. அதேபோல, ஸ்டெர் லைட் ஆலை பிர்ச்சினைக்கும் தீர்வு காணப்பட வேண்டும். இந்த விஷயத்தில் மக்களின் நியாய மான உரிமைக் குரலுக்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும்.

இவ்வாறு நாசர் பேசினார்.

போராட்டத்தின்போது தண் ணீர் இல்லாமல் விளைந்த நெற்பயிரை விவசாயி ஒருவர் மேடைக்கு கொண்டு வந்து காண்பித்தார். அந்தப் பயிரை கையில் ஏந்தியபடி தென்னிந்திய திரைப் பட நடிகர் சங்கத்தின் தலைவர் விஷால் பேசும்போது, “காவிரி விவகாரம் தொடர்பாக இன்று (நேற்று) மட்டும் சுமார் 2 ஆயிரம் பேரிடம் கோரிக்கை மனுவில் கை யெழுத்து வாங்கியுள்ளோம். இதுதவிர, தமிழ் திரையுலகைச் சேர்ந்த 25 ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கி ஆளுநரி டம் மனு அளிக்க உள்ளோம். ஏனெனில், விவசாயி வாழ வேண்டும். விவசாயமும் வாழ வேண்டும். விவசாயிகள் வாழ காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு கட்டாயம் அமைக்க வேண்டும்" என பேசினார்.

தீர்மானங்கள்

போராட்டத்தின் நிறைவாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, "கர்நாடக மக்களுக்கு தமிழக மக்கள் எதிரிகள் அல்ல. தமிழக மக்களுக்கு கர்நாடக மக்கள் எதிரிகள் அல்ல. இவர்களை இணைக்கும் அரசி யல் எப்போது வரப்போகிறதோ அப்போதுதான் காவிரி பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக் கும் என்று நம்புகிறேன். தமிழக மக்களையும் கர்நாடக மக்களை யும் மோதவிட்டு வேடிக்கை பார்க் கும் அரசியல்தான் மோசமானது" என்றார்.

பின்னர் ஆர்.கே.செல்வமணி வாசித்த தீர்மானங்களின் விவரம் வருமாறு:

மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பாதிக்கக்கூடிய எந்த வொரு விஷயத்தையும் அரசாங் கம் அமல்படுத்தக் கூடாது.

காவிரி நீர் உற்பத்தியாகும் இடங்களையும் அது சேருகின்ற இடங்களையும் இயற்கை தீர்மானிக்கிறது. அதை சார்ந்திருக்கின்ற மக்கள் இரு மாநிலங்களிலும் இருக்கிறார்கள். அவர்களுடைய விவசாயம் மற்றும் குடிநீர் சார்ந்த வாழ்வாதாரத்தை நாங்கள் மதிக்கிறோம். அதேசமயம், காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழக விவசாயிகளுக்கான உரிமைகள் முறைப்படி கிடைக்க வேண்டுமென்று நாங்கள் கோரு கிறோம்.

நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கக்கூடிய காவிரி நீர் பிரச்சினை, தமிழக மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அரசியலற்றப் பொதுநோக்குடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, அதற்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

கடந்த 25 வருடங்களாகப் பல அரசாங்கங்களால் கையாளப்பட்டு வருகிறது ஸ்டெர்லைட் பிரச்சினை. இப்போது ஸ்டெர்லைட் நிர்வாகம் அந்த ஆலையின் உரிமத்தைப் புதுப்பிக்கவும் மேலும் விரிவாக்கவும் அனுமதி கோரி நிற்கிறது. இந்த நேரத்தில் அந்த ஆலை வெளிப்படுத்தும் நச்சுக்களால் பல்வேறு வகையில் அப்பகுதி மக்களும் குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் பெரும் பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்கு உறுதுணையாகத் தமிழக அரசும் திரைத்துறை சார்ந்த நாங்களும் போராடி வருகிறோம். மத்திய அரசு இதற்கு செவிசாய்த்து, அப்பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டுமென வலியுறுத்துகி றோம்.

மேலும், இவ்வளவு காலம் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால், மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கும் பாதிப்புகளுக் கும் உரிய நிவாரணம் வழங்கப் பட வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை தமிழக திரைத்துறை சார்பாக வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள்

இந்தப் போராட்டத்தில் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், கார்த்தி, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, விவேக், செந்தில், சிவக்குமார், பொன்வண்ணன், பார்த்திபன், சித்தார்த், ஆனந்தராஜ், மயில்சாமி, ரமேஷ்கண்ணா, நட்டி, தம்பிராமையா, மன்சூர் அலிகான், பிரசாந்த், கவுதம் கார்த்திக், சத்யராஜ், சிபி சத்யராஜ், ஸ்ரீகாந்த், ஜி.வி.பிரகாஷ், இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பேரரசு, எஸ்பி. முத்துராமன், லிங்குசாமி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயம் ராஜா, கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், பாண்டிராஜ், பூ சசி, மகிழ் திருமேனி, ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஜேம்ஸ் வசந்தன், விஜய் ஆண்டனி, கவிஞர்கள் வைரமுத்து, பிறைசூடன், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்டவர்களும் நடிகர் சங்க நிர்வாகி கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

நடிகைகள் தன்ஷிகா, வரலட்சுமி, ரேகா, ஆர்த்தி, லதா, சச்சு, ஸ்ரீபிரியா சி.ஆர்.சரஸ்வதி, கஸ்தூரி உள்ளிட்ட சில நடிகைகள் மட்டுமே கலந்து கொண்டனர். அதேநேரம் முன்ணணி நடிகைகளான நயன்தாரா, த்ரிஷா, கீர்த்திசுரேஷ், சமந்தா உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவில்லை.

(மேலும் படங்கள் கடைசிப் பக்கம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x