Published : 13 Apr 2024 05:54 PM
Last Updated : 13 Apr 2024 05:54 PM
சென்னை: 2026 சட்டபேரவைத் தேர்தலிலும் அதிமுக உடனான கூட்டணி தொடரும் என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளில் ஒன்று ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி (ஏஐஎம்ஐஎம்).
சில தினங்கள் முன் பிரச்சாரத்துக்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர் வந்திருந்தபோது அவரை நேரில் சந்தித்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் மாநில தலைவர் வக்கீல் அகமது ஆதரவை தெரிவித்தார்.
இதன்பின் பேசிய அகமது, "மக்களவை தேர்தலில் அதிமுகவை ஆதரித்து அசாதுதீன் ஒவைசி பிரச்சாரம் செய்வார்" என்றும் தெரிவித்து இருந்தார். எனினும் அசாதுதீன் ஒவைசி தரப்பில் இருந்து அதிமுக கூட்டணி தொடர்பாக எந்தத் தகவலும் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில்தான் இன்று அதிமுக உடனான கூட்டணி அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என்று அசாதுதீன் ஒவைசி அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், "பாஜகவுடன் கூட்டணி வைக்க மறுத்துள்ள அதிமுக, எதிர்காலத்திலும் அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என்று கூறியுள்ளது. மேலும், சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சியை எதிர்ப்போம் என்றும் உறுதி அளித்துள்ளது. எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஏஐஎம்ஐஎம் ஆதரவு அளிக்கும். அதேபோல், சட்டசபை தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.
AIADMK has refused to ally with BJP and has committed to never allying with it in the future. It has also assured that it will oppose CAA, NPR & NRC. Therefore, AIMIM extends its support to AIADMK in the coming Lok Sabha elections.
Our alliance will also continue for the Assembly…— Asaduddin Owaisi (@asadowaisi) April 13, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT