Last Updated : 08 Apr, 2024 03:14 PM

6  

Published : 08 Apr 2024 03:14 PM
Last Updated : 08 Apr 2024 03:14 PM

“தங்கச் சுரங்கத்தையே வெட்டிக் கொடுத்தாலும் திமுக வெற்றி பெறாது” - அண்ணாமலை @ கோவை

கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவை சரவணம்பட்டி பகுதியில் இன்று பிரச்சாரம் செய்தார்.

கோவை: கோவையில் வாக்காளர்களுக்கு தங்கச் சுரங்கத்தையே வெட்டிக் கொடுத்தாலும் திமுக வெற்றி பெறாது என அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை சரவணம்பட்டி, விளாங்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப்.9) மாலை மத்திய சென்னை, தென் சென்னையில் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இரவு சென்னையில் தங்கி நாளை மறுதினம் வேலூரில் பிரச்சாரம் செய்கிறார். அங்கிருந்து நேரடியாக மேட்டுப்பாளையம் வருகிறார். மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் நீலகிரி, கோவை, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி பிரச்சாரம் செய்கிறார்.பிரதமர் மோடி ஏப்ரல் 12-ம் தேதிக்கு பின் மீண்டும் தமிழகம் வர உள்ளார” என்றார்.

கருத்து சொல்ல ஒன்றுமில்லை: ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் குறித்து கேட்டதற்கு, “திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ‘எனக்குத் தொடர்பு இல்லை’ என கூறிய பின் அவரை தொடர்புபடுத்தி பேசப்படும் சம்பவத்தில் கருத்து சொல்ல ஒன்றுமில்லை. எதிர்க்கட்சியினர் அரசியல் செய்கின்றனர். கோவையில் 85 வயதுக்கு மேற்பட்டோர் வாக்குப்பதிவு செய்தால் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. எதிர்வரும் நாட்களிலும். புறநகர்ப் பகுதிகளில் பல இடங்களில் ‘கேலோ இந்தியா’ திட்டத்தின்கீழ் மைதானங்கள் அமைக்கப்படும்.

கோவை மட்டுமின்றி தமிழகத்தில் பல இடங்களில் சர்வதேச விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும் முதல்வர் கோவையில் ஒரு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். 100 மீட்டருக்கு 10 குழிகள் உள்ளதை சீரமைக்க முதலில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறுபான்மை, பெருபான்மை என்ற அரசியலுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. கரூர் கம்பெனி கோவைக்கு வந்துவிட்டனர். இந்த முறை என்ன செய்தாலும் கோவை மக்கள் தெளிவாக உள்ளனர். தங்கச் சுரங்கத்தையே வெட்டிக் கொடுத்தாலும் கோவையில் திமுக வெற்றி பெறாது.

சோமனூரில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பூத் 330 நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு கழிப்பிட வசதி இல்லை. சாலை வசதி மேம்படுத்த வேண்டும். நொய்யல் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளை மேம்படுத்த வேண்டும். தொழில் வளர்ச்சிக்கு பல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கிராமப் புறங்கள் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்திய தலை நகர் தொடர்பாக நடிகர் கமல் தெரிவித்த கருத்து அவருக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x