Published : 08 Apr 2024 11:50 AM
Last Updated : 08 Apr 2024 11:50 AM
ஓசூர்: ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ரூபாய் 30 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 500 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று (திங்கள் கிழமை) அதிகாலை 3 மணியளவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹைதராபாத்திலிருந்து கோவை சென்ற சொகுசுப் பேருந்தை சோதனை மேற்கொண்டதில் அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூபாய் 30 லட்சம் 50 ஆயிரம் மற்றும் 500 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கட்டுகட்டாக பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆபரண தங்க நகைகளை ஓசூர் சார் ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பிரியங்கா அவர்கள் மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது
விசாரணையில் கோவையைச் சேர்ந்த நகை வியாபாரி ராஜ்குமார் என்பவர் ஹைதராபாத்தில் உள்ள தங்க நகைக் கடைகளுக்கு விற்பனை செய்வதாகவும் அதன் மூலம் பெறப்பட்ட பணம் மற்றும் மோதிரம், காதணிகள், சிறிய தங்கக் கட்டிகள் போன்றவைகளும் சிறிய லக்கேஜ் பேக்கில் எடுத்து வந்தது தெரியவந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT