Published : 08 Apr 2024 04:04 AM
Last Updated : 08 Apr 2024 04:04 AM

“கடலூர் தொகுதியில் மச்சான், பச்சான் பாட்சா பலிக்காது” - பிரேமலதா விஜயகாந்த்

கடலூரில், தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா பிரச்சாரம் செய்தார்.

கடலூர்: கடலூர் தொகுதியில் மச்சான், பச்சான் பாட்சா பலிக்காது என்றுகடலூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார்.

கடலூரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: கடலூர் கேப்டனின் கோட்டை. மக்களின் ஒட்டுமொத்த விசுவா சியாக மண்ணின் மைந்தர் சிவக் கொழுந்து உள்ளார். இந்த நல்லவருக்கு இந்த தேர்தலில் வெற்றியை தர வேண்டும் என்று கேப்டன் மனைவியாக, உங்கள் சகோதரியாக கேட்டுக்கொள்கிறேன். கடலூர் தொகுதியில் மச்சானும், பச்சானும் போட்டியிடுகிறார்கள். மச்சான், பச்சான் பாட்சா பலிக்காது என்பதை தேர்தலில் ஓட்டளித்து நிரூபிக்க வேண்டும். பொய் வாக்குறுதிகளை கூறும் பாஜக, திமுகவுக்கு சவுக்கடி தர வேண்டும்.

இது சாதாரண கூட்டணி இல்லை. இது மக்கள் கூட்டணி. சரித்திம் படைக்கும் கூட்டணி. உங்களுடைய வாக்குகளை 1-ம் நம்பர் பட்டனில் அழுத்த வேண்டும். சிவக்கொழுந்தை வெற்றி பெற வைக்க வேண்டும். சிவக்கொழுந்து வெற்றி பெற்றால் கடலூர் - புதுச்சேரி சாலை போக்குவரத்து நெரிசல் குறைக்க மேம்பாலம் கொண்டு வருவார். சிப்காட்டால் நீர் மாசுபட்டு உள்ளது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை - நாகப்பட்டினம் கடல் வழி போக்கு வரத்து ஏற்படுத்தப்படும்.

கடலூரில் மேயர் கணவர், மேயர் போல செயல்படுகிறார். வரி பாக்கி தரவில்லை என்றால் குண்டர்களை விட்டு மிரட்டுபவர்கள் தான் திமுகவினர். வரி பாக்கிக்காக கடலூர் கந்தசாமி கல்லூரியில் முதல்வர் அலுவலகத்தை குண்டர் களை வைத்து பூட்டியவர்கள் திமுவினர். நடைபாதை வியாபாரிகள் நிலை மோசமாக உள்ளது. நாங்கள் வெற்றி பெற்று வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிவக்கொழுந்தை அதிக வாக்கு வித்தியா சத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்றார். முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x