Published : 03 Apr 2024 01:25 PM
Last Updated : 03 Apr 2024 01:25 PM
சென்னை: திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மூவரையும் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது. மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து நேற்று திருச்சி முகாமில் இருந்து மூவரும் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து மூவரும் இன்று காலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முருகன் மனைவி நளினி சென்னை விமான நிலையம் வந்து அவர்களை வழியனுப்பி வைத்தார். இதன்மூலம் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு பின் மூவரும் தாயகமான இலங்கைக்கு திரும்புகின்றனர்.
முன்னதாக, தாயகம் திரும்புவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் பாஸ்போர்ட் வேண்டும் என்றும் கூறி முருகன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பின்படி மூவருக்கும் பாஸ்போர்ட் மற்றும் இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியது. அந்த அடிப்படையில் மூவரும் இலங்கைக்கு பயணமாகியுள்ளனர்.
#WATCH | Chennai, Tamil Nadu: Rajiv Gandhi assassination case convicts- Muguran, Robert and Jayakumar deported to Sri Lanka from Chennai airport this morning.
Murugan, Jayakumar and Robert were staying in the Trichy refugee camp. pic.twitter.com/EZxpFpi1lT— ANI (@ANI) April 3, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT