Published : 27 Mar 2024 11:12 AM
Last Updated : 27 Mar 2024 11:12 AM
வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், அவரது மனைவி லலிதா லட்சுமி ஆகியோர் பெயரில் மொத்தம் ரூ.152 கோடியே 77 லட்சத்து 86 ஆயிரத்து 818 மதிப்பிலான அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப் பிடப்பட்டுள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பெயரில் மொத்தம் ரூ.36 கோடியே 47 லட்சத்து 81 ஆயிரத்து 921 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ.37 கோடியே 40 லட்சத்து 50 ஆயிரத்து 259 மதிப்பிலும் அசையும் சொத்துகள் உள்ளன.
ஏ.சி.சண்முகத்திடம் கையிருப்பு ரொக்கமாக ரூ.55 ஆயிரத்து 601, வங்கியிருப்பு ரூ.94 லட்சத்து 64 ஆயிரத்து 43, பங்கு பத்திரங்களில் முதலீடு ரூ.30 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 440, இதர முதலீட்டின் மீதான வருவாய் ரூ.3 கோடியே 93 லட்சத்து 65 ஆயிரத்து 337, நகைகள் ரூ.78 லட்சத்து 66 ஆயிரத்து 500-ம் உள்ளன.
மனைவி லலிதா லட்சுமி பெயரில் கையிருப்பு ரொக்கம் ரூ.85,480, வங்கியிருப்பு ரூ.1 கோடியே 17 லட்சத்து ஒரு ஆயிரத்து 780, பங்கு பத்திரங்களில் முதலீடு ரூ.26 கோடியே 85 லட்சத்து 27 ஆயிரத்து 492, காப்பீட்டு முதலீடு ரூ.41 லட்சத்து 12 ஆயிரத்து 499, இதர முதலீட்டின் மீதான வருவாய் ரூ.7 கோடியே 69 லட்சத்து 14 ஆயிரத்து 908, நகைகள் ரூ.1 கோடியே 27 லட்சத்து 8 ஆயிரத்து 100 அடங்கும்.
விவசாய நிலங்கள், மனைகள், குடியிருப்புகள் என ஏ.சி.சண்முகம் பெயரில் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர், திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் ரூ.40 கோடியே 13 லட்சத்து 79 ஆயிரத்து 600 மதிப்பிலும், லலிதா லட்சுமி பெயரில் ரூ.28 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 138 மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளன.
விவசாய நிலங்கள் அல்லாத இனங்களில் (வணிக வளாகங்கள் உள்பட) ஏ.சி.சண்முகம் பெயரில் மொத்தம் ரூ.1 கோடியே 85 லட்சத்து 88 ஆயிரத்து 400 மதிப்பிலும், லலிதா லட்சுமி பெயரில் ரூ.8 கோடியே 40 லட்சத்து 6 ஆயிரத்து 500 மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளன. இதில், ஏ.சி.சண்முகம் வசம் 2,105 கிராம் தங்கம், 20 கிலோ வெள்ளி, லலிதா லட்சுமி வசம் 3,837 கிராம் தங்கம், 1 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளன. இருவர் வசம் வாகனங்கள் எதுவும் இல்லை.
ஏ.சி.சண்முகம் பெயரில் ரூ.17 கோடியே 72 லட்சத்து 48 ஆயிரத்து 122 மதிப்பில் கடனும், லலிதா லட்சுமி பெயரில் ரூ.11 கோடியே 12 லட்சத்து 21 ஆயிரத்து 55 மதிப்பில் கடன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏ.சி.சண்முகம் வேலூர் முத்துரங்கம் அரசினர் கல்லூரியில் 1975-ம் ஆண்டு பி.ஏ பட்டப்படிப்பும், பெங்களூரு விஸ்வேஸ்வரபுரா சட்டக்கல்லூரியில் எல்.எல்.பி சட்டப்படிப்பும் படித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT