Published : 10 Aug 2014 01:19 PM
Last Updated : 10 Aug 2014 01:19 PM

குன்னூர் தனியார் பள்ளி தடுப்புச் சுவர் இடிந்தது: விடுமுறையால் மாணவிகள் உயிர் தப்பினர்

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகரின் மையப் பகுதியான மவுண்ட் சாலையில் அமைந்துள்ளது புனித ஜோசப்ஸ் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி. இப் பள்ளியின் 11 அடி உயர தடுப்புச் சுவர், கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொலை தொடர்பு நிறுவனங்கள் சார்பில் அப்பகுதி சாலையோரத்தில் சனிக்கிழமை நடை பெற்று வந்த கேபிள்கள் பதிக்கும் பணியில் 5 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பள்ளியின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. அதிருஷ்டவசமாக கேபிள் பணியாளர்கள் அங்கிருந்து ஓடியதால் உயிர் தப்பினர்.

இப்பகுதியில் மேரீஸ் பெண்கள் பள்ளி, துவக்கப் பள்ளி மற்றும் புனித ஜோசப்ஸ் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. சனிக்கிழமை விடுமுறை என்பதால், அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால், மவுண்ட் சாலையில் வாகனப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, கோத்தகிரி சாலை வழியாக திருப்பிவிடப்பட்டது.

குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கா.ராமச்சந்திரன், நகராட்சி ஆணையர் ஜான்சன், போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பொக்லைன் இயந் திரம் வரவழைக்கப்பட்டு கற்களை அகற்றிய பின்னர், இடிபாடுகளில் யாரும் சிக்கவில்லை என உறுதி செய்யப்பட்டதையடுத்து, அதிகாரி கள் நிம்மதி அடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x