Last Updated : 28 Feb, 2018 08:08 PM

 

Published : 28 Feb 2018 08:08 PM
Last Updated : 28 Feb 2018 08:08 PM

ஜிப்மரில் சிகிச்சை பெறும் ஆராயியை நேரில் பார்த்து ஆறுதல் கூறிய அமைச்சர் சண்முகம்: குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவர் என தகவல்

 

மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு ஜிப்மரில் சிகிச்சை பெறும் ஆராயி மற்றும் அவரது மகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவர். இதற்காக ஆறு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

விழுப்பும் திருக்கோவிலூர் அருகே வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ஆராயி. இவர்களுக்கு இரு குழந்தைகள். மகள் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். மகன் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 21-ம் தேதி இவரது வீட்டில் நுழைந்த கும்பல் மனைவி, மகள், மகன் ஆகியோரை தாக்கியதில் சிறுவன் சமயன் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தின் போது ஏழுமலையின் மனைவி, மகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

ஆராயி, அவரது மகள் ஆகிய இருவரும் சுய நினைவற்ற நிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள இருவரும் அவசர சிகிச்சை பிரிவில் தனித்தனியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பாதிக்கப்பட்டவர்களை ஜிப்மர் வந்து பார்த்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் சண்முகம் கூறுகையில், ''குற்றவாளிகளை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர். ஆராயி அரை மயக்க நிலையில் உள்ளார். அவரது மகளின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை'' என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின் போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் மற்றும் புதுச்சேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன்,வையாபுரி மணிகண்டன் மற்றும் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x