Published : 21 Mar 2024 02:43 AM
Last Updated : 21 Mar 2024 02:43 AM

விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளர் துரை.ரவிக்குமார் - சிறு குறிப்பு

துரை.ரவிக்குமார்

விழுப்புரம்: திமுக கூட்டணியில், விழுப்புரம் மக்களவை (தனி) தொகுதி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில், தற்போது மக்களவை உறுப்பினராக உள்ள துரை.ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார்.

மயிலாடுதுறை மாவட்டம் மாங்கணாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார் (64), எம்.ஏ., பி.எல். படிப்புடன் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பொதுச் செயலாளராக உள்ளார். 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை காட்டு மன்னார்கோவில் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக பணியாற்றினார்.

இவரது மனைவி செண்பகவல்லி, மகன்கள் ஆதவன், அதீதன். இலக்கிய ஆர்வலரான இவர், தமிழக அரசின் சார்பில் 2010-ம் ஆண்டில் அறிஞர் அண்ணா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். மணற்கேணி ஆய்வு வெளி, தலித் இதழ், தலித் போதி ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x