Published : 21 Mar 2024 11:49 AM
Last Updated : 21 Mar 2024 11:49 AM
சென்னை: வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கான அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று 16 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள தொகுதிகளுக்கான 17 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று (வியாழக்கிழமை) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அத்துடன் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் வேட்பாளரை அறிவித்துள்ளது அதிமுக. அதன் விவரம்:
வேட்பாளர்கள் பட்டியல்...
விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ராணி என்பவர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக 33 தொகுதிகளில் போட்டி: அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. அதன்படி திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது.
அதேபோல், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
மீதமுள்ள 33 இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது. இந்த 33 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT