Published : 20 Mar 2024 06:49 AM
Last Updated : 20 Mar 2024 06:49 AM
சென்னை: பாஜக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்றைக்குள் இறுதி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஏற்கெனவே, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் மற்றும் தலைவர் ரவி பச்சமுத்து, யாதவ மகாசபை மற்றும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் தலைவர் தேவநாதன் யாதவ், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டவர்களுடன் கூட்டணியை பாஜக முடிவு செய் துள்ளது.
பாமக, தேமுதிகவை எதிர்நோக்கி பாஜக காத்திருந்ததால், ஏற்கெனவே கூட்டணி உறுதி செய்த கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்யாமல் இருந்தது.
பாமகவுடன் ஒப்பந்தம்: இந்நிலையில் நேற்று முன்தினம் பாமகவுடன் கூட்டணியை பாஜகமுடிவு செய்தது. நேற்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோரை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.
அப்போது, பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 தொகுதிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. மதியம் சேலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாஜகவில் தனது சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பாளர் தேர்வு, மனு தாக்கல், பிரச்சாரம் போன்ற பணிகள் இருப்பதால் இன்றைக்குள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதை இறுதி செய்யும் கட்டாயத்தில் பாஜக உள்ளது.
கட்சிகளுடன் பேச்சுவார்த்தை: இதுதொடர்பாக பாஜக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, “பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகள் என்பது நாளை (இன்று) அறிவிக்கப்படும். மற்ற கட்சிகளுடனும் தொகுதி பங்கீடுபேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அவர்களுக்கும் எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதை இன்று பாஜகதலைமை அறிவிக்க வாய்ப்புள் ளது. கூட்டணிக்கு தேமுதிக வந்தால், அதன்பின் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் சிறு மாறுதல் செய் யப்பட்டு அறிவிக்கப்படலாம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT