Published : 24 Apr 2014 08:01 AM
Last Updated : 24 Apr 2014 08:01 AM

குரூப்-2 பணி காலியிடங்களுக்கு ஏப்.28-ல் 3-வது கட்ட கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-2 நேர்காணல் அல்லாத பணிகளில் உள்ள காலியிடங் களுக்கு 3-வது கட்ட கலந்தாய்வு ஏப்ரல் 28-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித் துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி வெ.ஷோபனா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

197 பேருக்கு அனுமதி

2011-2013-ல் அடங்கிய குரூப்-2 பதவிகளில் காலியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 4.11.2012 அன்று எழுத்துத்தேர்வு நடத்தப் பட்டது. இதில் நேர்காணல் அல்லாத பணிகளில் எஞ்சியுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ஏப்ரல் 28-ம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதற்கு அனுமதிக்கப்பட்ட 197 பேரின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர் களுக்கு அழைப்புக்கடிதம் விரைவு தபால் மூலம் தனித் தனியே அனுப்பப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இருந்தும் அழைப்புக்கடிதத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள லாம். மேற்குறிப்பிட்ட நாளன்று காலை 8.30 மணியளவில் கலந்தாய்வுக்கு வந்துவிடுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத் தப்படுகிறார்கள்.

மறுவாய்ப்பு கிடையாது

விண்ணப்பதாரர்கள் கலந் தாய்வுக்குப் பரிசீலிக்கப்படும் போது காலிப்பணியிடங்கள் உள் ளதைப் பொறுத்தே அனுமதிக்கப் படுவார்கள். எனவே, கலந்தாய் வுக்கு அழைக்கப்படும் அனை வருக்கும் பணிநியமனம் வழங்கப் படும் என்பதை உறுதிகூற இயலாது. கலந்தாய்வுக்கு வரத் தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப் படமாட்டாது.

ஆதரவற்ற விதவைகள், முன் னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினர் களுக்கான காலியிடங்கள் மற்றும் நிரப்பப்படாத பணியிடங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு பின்னர் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணிநியமனம் வழங்கப்படும் என்பதை உறுதிகூற இயலாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x