Published : 19 Mar 2024 05:31 AM
Last Updated : 19 Mar 2024 05:31 AM
சென்னை: வாக்காளர்களுக்கு பணம், இலவச பொருட்கள் விநியோகம் நடப்பது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்காக வருமான வரித் துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா, இலவச பொருட்கள் விநியோகம் நடப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, வருமான வரித் துறை சார்பில் 24மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. எந்த பகுதியிலாவது வாக்காளர்களுக்கு பணம், இலவச பொருட்கள் விநியோகம் நடந்தால், அதுபற்றிய தகவல்கள், புகார்களை பொதுமக்கள், அரசியல் கட்சிகள் தெரிவிக்கலாம்.
கட்டுப்பாட்டு அறையை 1800 425 6669 என்ற இலவச தொலைபேசி எண், tn.electioncomplaints2024@incometax.gov.in என்ற இ-மெயில் முகவரி அல்லது 94453 94453 என்றவாட்ஸ்அப் எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.
‘வருமான வரி தலைமை இயக்குநர் (புலனாய்வு), வருமான வரி புலனாய்வு கட்டிடம், எண் 46, மகாத்மா காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600 034’ என்ற முகவரியில் தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT