Published : 18 Mar 2024 02:49 PM
Last Updated : 18 Mar 2024 02:49 PM
சென்னை: நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் கங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்பும் கட்சியினர் மார்ச் 20-ம் தேதிக்குள் விருப்பமனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெறவுள்ள 2024 மக்களவை பொதுத் தேர்தலில், தமிழகத்தில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 மக்களவை தொகுதிகளுக்கும், அத்துடன் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் (233) விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்தி விருப்ப மனு படிவத்தை இன்று (மார்ச் 18) திங்கள்கிழமை முதல் சென்னையில் உள்ள சத்யமூர்த்தி பவனில் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுப் படிவங்களை மார்ச் 20-ம் தேதி புதன்கிழமை மதியம் 1 மணிக்குள் மக்களவைப் பொதுத் தொகுதிகளுக்கும் ரூ.30,000, மக்களவைத் தனி தொகுதி மற்றும் மகளிருக்கான தொகுதிகளுக்கு ரூ.15,000 , மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ரூ.10,000 மகளிருக்கு ரூ.5,000 கட்சி நன்கொடையாக TamilNadu Congress Committee என்ற பெயரில் வங்கி வரைவோலையாக (Demand Draft Payable at Chennai) செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விருப்ப மனு அளிக்கும் அனைவரும் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்தும், தனியாக இணைக்கப்பட வேண்டிய இதர விபரங்களை விருப்ப மனுவுடன் இணைத்தும், சென்னை சத்யமூர்த்தி பவனில் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
விருப்ப மனு அளிக்கும் அனைவருக்கும் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை (Voter ID Card)5, ஆதார் அட்டை (Aadhar Card) மற்றும் பான் கார்டு (Pan Card) நகலை கட்டாயமாக இணைக்க வேண்டும். மேலும், விருப்ப மனுவுக்கான கட்டணம் ரூ.500-ஐ ரொக்கமாக செலுத்தலாம். ஆனால், கட்சி நன்கொடை தொகையை கட்டாயமாக வரைவோலையாக (Demand Draft) மட்டுமே செலுத்த வேண்டும், என்று அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 9 இடங்கள்:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT