Published : 18 Mar 2024 09:50 AM
Last Updated : 18 Mar 2024 09:50 AM

“சீட்டுக்கும், நோட்டுக்கும் பேரம் பேசும் கட்சிகள்” - வேல்முருகன் எம்எல்ஏ விமர்சனம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பாஜகவின் அழுத்தம் காரணமாகத் தான் தமிழகத்தில் 30 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படுகிறது. பாஜக வெற்றி பெறக்கூடிய பகுதிகளில் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

கூட்டணி குறித்து திமுகவிடம் பேசியுள்ளோம். முதல்வர் அழைத்துப் பேசுவார் என தெரிவித்துள்ளார்கள். அதற்காக காத்திருக்கிறேன். எங்களுக்கு இடம் வழங்கவில்லை என்றாலும், திமுக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சாதிகளுக்கு ஏற்றவாறு கல்வி, வேலைவாய்ப்பில் உரிமையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளேன்.

தேர்தலில் சீட்டுக்கான உடன்படிக்கை என்றால் சுலபமாக பேசி தீர்த்துக் கொள்ளலாம். ஆனால், பெரும்பான்மையான கட்சிகள் (திமுகவைத் தவிர மற்ற கூட்டணியில் உள்ளவை) சீட்டுக்கும், நோட்டுக்கும் பேரம் பேசுவதால் கூட்டணி அமைவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 1 Comments )
  • s
    suresh

    நீங்கள் உங்கள் கூட்டணியையே தவறாக பேசுவது போல இருக்கிறது.

 
x