Published : 22 Feb 2018 09:04 AM
Last Updated : 22 Feb 2018 09:04 AM
ஊழலை ஒழிக்க ஒவ்வொருவரும் தியாகம் செய்ய வேண்டும் என கமல் தெரிவித்தார்.
மதுரையில் நேற்று புதிய கட்சி, கொடி அறிமுக விழாவில் மக்களின் கேள்விகளுக்கு கமல் மேடையிலேயே பதில் அளித்தார். அதன் விவரம்:
இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள்?
உங்கள் உள்ளங்களில் இருந்தேன். இனிமேல், உங்கள் இல்லங்களில் இருக்க ஆசைப்படுகிறேன்.
உங்களை நம்பி வரலாமா? எத்தனை நாள் தாக்குப் பிடிப்பீர்கள்?
என் மூச்சு இருக்கும்வரை இருப்பேன். இங்கு இருப்பவர்கள் யாரும் நிரந்தர முதல்வராக இருக்க மாட்டார்கள்.
உங்களுக்கு ஒரு கஷ்டம் வந்ததால்தான் விஸ்வரூபம் எடுத்தீர்களா?
விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை எடுத்துவிட்டேன். உங்களின் நிலையைப் பார்த்து கோபம் வந்ததால் எடுத்ததுதான் இந்த முடிவு.
உங்கள் வழிகாட்டி யார்?
அம்பேத்கர், காந்தி, நேரு, சந்திரபாபு நாயுடு, கேஜ்ரிவால், பினராயி விஜயனை பிடிக்கும். மக்களுக்கு நல்லது செய்யும் அனைவரும் எனது வழிகாட்டிகள்தான்
ஊழலை எப்படி ஒழிப்பீர்கள்?
தனியாக ஒழிக்க முடியாது. தனிப்பட்டு ஒவ்வொரும் தியாகம் செய்ய வேண்டியிருக்கும். அப்படி செய்தால், நாடு எங்கே போகிறது என பாருங்கள். உங்கள் அளவில் ஊழல் இல்லாவிட்டால், ஊழல் ஒழிந்துவிடும்.
உங்களுக்கு வாக்களித்து, ஆட்சிக்கு வந்தால் குவாட்டரும், ஸ்கூட்டரும் கொடுப்பீர்களா?
கொடுக்க முடியாது. நீங்கள் மற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கித்தரும் அளவுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவோம்.
தமிழகத்தில் தமிழ் செத்துக் கொண்டிருக்கிறதே?
சந்தோஷமாக தமிழ் பேசுங்கள். உங்கள் பேச்சில், உரைநடையில் தமிழ் இருந்தால் தமிழ் வாழும்.
எதற்கு ராமேசுவரம்? எதற்கு கலாம் வீடு?
கலாம் வீடு இருக்கும் இடம் ராமேசுவரம். பாவ புண்ணியத்தைவிட, நியாய, தர்மத்தில் எனக்கு நம்பிக்கை அதிகம்.இவ்வாறு கமல் பதில் அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT