Published : 17 Mar 2024 05:38 AM
Last Updated : 17 Mar 2024 05:38 AM
சென்னை: சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்குப் பதிலாக ஒரே சான்றிதழ்வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட் டுள்ளார்.
சுதந்திரம் பெறுவதற்கு முன்ஆங்கிலேய ஆட்சியில் குற்றப்பரம் பரை சட்டத்தினால் பாதிக்கப்பட்ட வகுப்பினர்கள், சீர்மரபினர் வகுப்புஎன வகைப்படுத்தப்பட்டு மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினரு டன் சேர்த்து 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு 68 வகுப்பினர்கள் சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசால்,பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 2008-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதிஅரசாணை (நிலை) எண்.85-இல் தமிழ்நாடு சட்டம் 45/1994-இன் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டு, சீர்மரபினர் வகுப்பினர் என சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
பின்னர், அரசாணை (நிலை) எண்.26, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, 2019-ம்ஆண்டு மார்ச் 8-ம் தேதி வெளியிடப்பட்ட ஆணையில், மாநில அரசின் இடஒதுக்கீடு (20 சதவீதம்) மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் (டிஎன்சி) என அழைக்கப்படுவர் எனவும், மத்திய அரசின்நலத்திட்ட பயன்களைப் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் (டிஎன்டி) என அழைக்கப்படுவர் என ஆணை வெளியிடப் பட்டுள்ளது.
மேற்கண்ட அரசாணைகளின் படி இரண்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவற்றை பெறுவதில் நடைமுறையில் சிரமம்உள்ளதாகவும் அதற்கு பதிலாக ஒரே சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
கோரிக்கை ஏற்பு: அந்த கோரிக்கைகளை அரசு ஆய்வு செய்து, சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities / Denotified Tribes என இரண்டு சான்றிதழ்களுக்குப் பதிலாக ஒரேசான்றிதழ் வழங்க தெளிவுரைகள் வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டா லின் ஆணையிட்டுள்ளார்.
அதன்படி வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய தெளிவுரையின்படி, இனி வருவாய் அலுவலர்கள் சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு ஒரே சான்றிதழ் வழங்குவார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT