Published : 17 Mar 2024 05:31 AM
Last Updated : 17 Mar 2024 05:31 AM
சென்னை: தமிழகத்துக்கு முதல் கட்டத்திலேயே தேர்தல் நடத்துவது இந்திய தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரி வித்தார்.
மக்களவைத் தேர்தல் தேதியைஇந்திய தேர்தல் ஆணையம் நேற்று பிற்பகல் 3 மணி அளவில்அறிவித்தது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் ஏப்ரல்19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள் ளது. இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல்அதிகாரி சத்யபிரத சாஹூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடத்தை விதிமுறைகள்: மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதி உடனடியாக மாநிலத்தில் அமலுக்கு வருகிறது. தேர்தல் பிரச்சாரங்களின்போது அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்னென்ன செய்யலாம். என்னென்ன செய்யக்கூடாது என்பது பற்றிநிறைய விதிமுறைகள் இருக்கின்றன. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது பெரிய குற்றம். அதில்ஈடுபடும் வேட்பாளர்கள் தகுதிநீக்கம் செய்யக்கூட வாய்ப்புள்ளது.
மாவட்டங்களில் பறக்கும்படை அதிகாரிகள், வீடியோ கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபடவுள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு வீடாக சென்று படிவம் விநியோகிக்கப்படும். தமிழகத்துக்கு முதல் கட்டத்திலேயே தேர்தல் நடத்துவது இந்தியதேர்தல் ஆணையம் எடுத்த முடிவுஆகும். கடந்த முறை தமிழகத் துக்கு இரண்டாம் கட்டத்தில் வாக் குப்பதிவு நடந்தது.
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: விளவங்கோடு தொகுதிக்கு மட்டும்தான் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திருக்கோவிலூர் தொகு திக்கு இடைத்தேர்தல் இல்லை. அத்தொகுதியில் வெற்றி பெற்ற பொன்முடி மீண்டும் எம்எல்ஏ-வாக தொடர்கிறார். அமைச்சராக பொன்முடி பதவி ஏற்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். திருக்கோவிலூர் தொகுதி இடைத்தேர்தல் என்று தவறுதலாக இடம்பெற்றுவிட்டது. அதை உடனே நீக்கிவிட்டோம். டீப் ஃபேக் (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் தவறுதலாக பிரச்சாரம் செய்தால் அதனை தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம். சட்டப்படி நட வடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் இனிமேல் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் உன்னிப்பாக கண்காணிப்படும். சந்தேகப்படும்படியான பரிவர்த்தனைகள் நடந்தால் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்பு: இஃப்தார் நோன்பு நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கலாம். அதற்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை. ஆனால், வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடக்கூடாது. அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் வரும் 18-ம் தேதி ஆலோசனை நடத்தப்படும். தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளதால், ரூ.50 ஆயிரம் ரொக்கம் மட்டுமே கையில் எடுத்துச் செல்லலாம். ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக பணம் கொண்டு செல்லும்போது, அதற்கான ரசீது இருக்க வேண்டும்.தேர்தலுக்கு 7 நாட்கள் முன்பு பூத் சிலிப் வழங்கப்படும்.
பொன்முடி பதவி ஏற்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகி நடவடிக்கை எடுக்கப்படும்.
பெயர் சேர்க்க விண்ணப்பம்: வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாளான வரும் 27-ம் தேதி வரை 18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் இனிமேல் புதிய அறிவிப்புகளை தமிழகஅரசு வெளியிடக்கூடாது. முன்தேதியிட்டும் அறிவிப்பு வெளிவரக் கூடாது. அரசாணைகள் வெளியிடக்கூடாது. தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட உள்ளனர். மொத்தம் 20 கம்பெனி துணைராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் எளிதாக ஓட்டுப்போடும் வகையில் சாய்வுதள படிக்கட்டு கட்டாயம் அமைக்கப்படும்.
முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடத்துமாறு பரிந்துரைக்கவில்லை. தமிழகத்தில் பள்ளி பொதுத்தேர்வு உள்ளிட்ட விவரங்களை மட்டும் தெரிவித்தோம். நாடுதழுவிய அளவில் சாதக பாதகங்களை ஆராய்ந்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம்தான் தேர்தல் தேதியை முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT