Published : 17 Mar 2024 05:43 AM
Last Updated : 17 Mar 2024 05:43 AM

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன: தலைமை செயலகத்தில் அரசு விளம்பர படங்கள் அகற்றம்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, சென்னை தலைமை ச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் திட்டங்கள் குறித்த விளம்ப ர பலகை கள் அனைத்தும் நேற்று மாலை அகற்றப்பட்டன. படம்: ம.பிரபு

சென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தலைமை செயலகத்தில் முதல்வர், அரசின் சாதனை விளக்க விளம்பரப் படங்கள் அகற்றப்பட்டன.

மக்களவைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் அறிவித்தது. நாடுமுழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள் ளது.

தேர்தல் தேதியை ஆணை யம் அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் உட்பட நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

முதல்கட்டமாக சென்னை தலைமைச் செயலகத்தில் வைக்கப் பட்டுள்ள முதல்வர், அமைச்சர்கள் படங்கள் மற்றும் அரசின் சாதனை விளக்க படங்களை ஊழியர்கள் அகற்றினர். அமைச்சர்களின் அலுவலகங்களில் இருந்த முதல்வர்உள்ளிட்ட படங்கள் அகற்றப் பட்டன.

மாநிலம் முழுவதும் மாநகராட்சி அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் முதல்வர், அமைச்சர்கள் உருவம் பதிக்கப்பட்ட விளம்பரங்கள், அறிவிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. சுவர் விளம்பரங்கள் அழிப்பது, சுவரொட்டிகளை கிழிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

அதேபோல், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோல், மத்திய, மாநில அரசு அலுவல கங்களில் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் அல்லது அவர்கள் புகைப்படங்களுடன் கூடிய காலண்டர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x