Published : 16 Mar 2024 05:51 AM
Last Updated : 16 Mar 2024 05:51 AM

கோடை வெப்பத்தை தணிக்க கோயில்களில் மோர், எலுமிச்சை ஜூஸ்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், மோர் மற்றும் எலுமிச்சை ஜூஸ் வழங்கும் திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடும் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பக்தர்களைக் காத்திடும் வகையில், 578 கோயில்களில் தற்காலிககீற்று பந்தல்கள் அமைத்திடவும், நடைபாதை தளங்களில் வெப்பத்தை தடுக்கும் வெள்ளை நிற வர்ணம் பூசவும், தேங்காய் நார் விரிப்புகள் அமைத்திடவும், அவ்வப்போது தரைதளத்தில் தேவையான அளவுக்கு தண்ணீர் பீய்ச்சி வெப்பத்தை தணித்து பக்தர்கள் நடந்து செல்ல ஏதுவானநடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கோயில்களில் பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்,நீர் மோர் மற்றும் எலுமிச்சை ஜூஸ்போன்றவற்றை கோடைகாலம் முடியும் வரை வழங்கவும் கோயில்களின் செயல் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கும் திட்டத்தை அந்தந்தகோயில்களின் அறங்காவலர்கள் செயல்படுத்துவார்கள். இத்திட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும்பொதுமக்கள் பங்களிப்பு அளித்தால் வரவேற்கப்படும்.

கடந்த 33 மாதங்களில் கோயில்களுக்குச் சொந்தமான ரூ.5,979 கோடி மதிப்பிலான 6,810 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x