Published : 15 Mar 2024 05:31 AM
Last Updated : 15 Mar 2024 05:31 AM
சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல்விடுக்கும் வகையில் பேசியதாக, அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது டெல்லி போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பிரதமர் நரேந்திரமோடி கடந்த4-ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, அவர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக, தமிழகத்திலிருந்து திமுக விரைவில்காணாமல் போகும் என பேசி யிருந்தார்.
முதல்வர் பிறந்தநாள் கூட்டம்: இந்நிலையில், சென்னை அருகே பல்லாவரத்தை அடுத்த பம்மல் பகுதியில் கடந்த 8-ம் தேதிநடைபெற்ற முதல்வர் மு.க.ஸ்டா லின் பிறந்தநாள் பொதுகூட்ட நிகழ்ச்சியில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், ‘‘எவ்வளவோ பிரதமரை நாங்கள் பார்த்துள் ளோம். ஆனால் இவ்வளவு மட்டமாகப் பேசிய பிரதமரை நாங்கள் பார்த்தது இல்லை. திமுகவை ஒழித்து விடுவேன் என்று சொல்கிறார். திமுக என்பது சாதாரண இயக்கம் இல்லை. பல பேர் உயிர்த் தியாகம் செய்து வளர்ந்த இயக்கம்.
திமுக ஒழிந்து விடும் என யார் யாரோ கூறினார்கள். ஆனால்அவர்கள்தான் ஒழிந்து போய்விட் டனர். நான் அமைச்சர் என்பதால் அடக்கி வாசிக்கிறேன். இல்லா விட்டால் பீஸ்... பீஸாக... ஆக்கிவிடு வேன்'' என்று பேசியிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. இதையடுத்து, அமைச்சரின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் உட்பட பல்வேறு தரப்பினர் கடும் கண் டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த விவ காரம் குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சத்ய ரஞ்சன் ஸ்வெய்ன், டெல்லி பார்லிமெண்ட் தெருவில் உள்ள காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். அப் போது, அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு தொடர்பான வீடியோவையும் புகார் மனுவுடன் சேர்த்து கொடுத்தார்.
5 பிரிவுகளில் வழக்கு: இதையடுத்து பிரதமருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் டெல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தவும் டெல்லி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT