Last Updated : 13 Mar, 2024 11:13 AM

2  

Published : 13 Mar 2024 11:13 AM
Last Updated : 13 Mar 2024 11:13 AM

“இழந்த செல்வாக்கை மீட்டெடுப்போம்” - தேமுதிக அவைத் தலைவர் வி.இளங்கோவன் நேர்காணல்

தொடர் தோல்வி, விஜயகாந்த் மறைவு என இக்கட்டான சூழலில் வரும் தேர்தலை எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள்? - 2011-க்கு பிறகு தேர்தல்களில் தேமுதிகவுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. அதேநேரம், விஜயகாந்த்துக்கு வாய்ப்பு வழங்கியிருந்தால் சிறந்த மாற்றத்தை தந்திருப்பார் என்ற எண்ணம் மக்களிடம் பரவலாக காணப்படுகிறது. அதற்கு இன்றளவும் அவரின் நினைவிடத்துக்கு வரும் மக்கள் கூட்டமே சாட்சி.

தேமுதிக-அதிமுக கூட்டணி எந்த நிலையில் உள்ளது? தாமதம் ஏன்? - தாமதமில்லை. இருகட்ட பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும். அதிமுக - தேமுதிக கூட்டணி மக்கள் விரும்பும் ஒன்றாக இருக்கும்.

அதிமுகவுடன் பேசும்போதே பாஜவுடனும் பேசுவதாக தகவல்கள் வருகிறதே? - இதுதவறான தகவல்கள். அடிப்படை ஆதாரமின்றி செய்திகளை வெளியிடக் கூடாது. தற்போது வரை அதிமுகவுடன் மட்டுமே பேசி வருகிறோம்.

பாஜக-தேமுதிக கூட்டணி இருக்காது என உறுதியாக கூறமுடியுமா? - பாஜகவுடன் பேசவில்லை என எங்கள் பொதுச் செயலாளரே தெளிவுபடுத்திவிட்டார்.

மக்களவைத் தேர்தல் தேமுதிகவுக்கு ஏறுமுகமா அமையுமா? - இந்த தேர்தலில் இழந்த செல்வாக்கை தேமுதிக மீண்டும் பெறும். அதற்காகவே வியூகங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளன.

பொதுச்செயலாளராக பிரேமலதாவின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன? - தலைவர் இல்லாத குறையை போக்கும் விதமாக தொண்டர்கள், நிர்வாகிகள் உட்பட அனைத்து தரப்பினரையும் அரவணைத்து வழிநடத்துகிறார். கட்சி பணிகளில் தன்னலமின்றி செயல்படுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x