Published : 13 Mar 2024 10:52 AM
Last Updated : 13 Mar 2024 10:52 AM
அதிமுக கூட்டணியில் சீட் கேட்டிருக்கிறீர்களா? - ஒரு தொகுதியை கேட்டிருக்கிறோம். தந்தால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம். தரவில்லை என்றாலும் இணைந்து பணியாற்றுவோம்.அதேநேரம், 2026 தேர்தலில் கூடுதல் சீட்களை தர உறுதி அளிக்க வலியுறுத்துவோம்.
அதிமுக-பாஜக கூட்டணி முறிவுக்கு என்ன காரணம்?இது அதிமுகவுக்கு பலன் தருமா? - பாஜக தலைமையில்தான் கூட்டணி என்று அண்ணாமலை தெரிவித்தார்.மாநிலத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக எப்படி பாஜக தலைமையை ஏற்றுக் கொள்ளும்? மேலும், அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கவில்லை.
எம்ஜிஆர்,ஜெயலலிதாவை மோடி புகழ என்ன காரணம்? - அதிமுகவின் வாக்குகளை பெறவும்,கடைசி நேரத்திலாவது மனம்மாறி கூட்டணிக்குள் அதிமுக வந்துவிடாதா என்ற நம்பிக்கையில் பிரதமர் பேசியுள்ளார்.
போதைப்பொருள் பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறாரே பழனிசாமி. இதற்கு தேர்தலில் பலன் கிட்டுமா? - சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கிய காரணம் போதைப்பொருள்.திமுகவில் இருந்தவரே போதைப்பொருள் கடத்தலில் சிக்கியுள்ளார்.இது திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.அதிமுகவுக்கு சாதகமாக அமையும்.
பாஜகவின்10ஆண்டு ஆட்சி, திமுகவின் 3ஆண்டு ஆட்சி. ஒப்பிடுங்களேன்? - தேசிய அளவில் பாஜக செய்வதை தான்,தமிழகத்தில் திமுக செய்கிறது.ஏழைகளை சுரண்டுவது,ஊழல் இரண்டும்தான் நடக்கிறது.
உங்களுக்கு பிறகுவிசிகவை தொடங்கிய திருமாவளவன் படிப்படியாக உயர்ந்துவிட்டார்.புரட்சி பாரதம் கட்சி வளர்ச்சி அடையாதற்கு என்ன காரணம்? - விசிகவைவிட,ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்காக அதிக அளவில் நாங்கள் பணியாற்றுகிறோம்.
திருமாவளவனிடம் அளவுக்கு அதிகமாக பணம் உள்ளது.ஊடகம் வைத்துள்ளார்.ஊடகங்களும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.எங்களிடம் இவை இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT