Published : 13 Mar 2024 05:51 AM
Last Updated : 13 Mar 2024 05:51 AM
சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய அளவில் மார்ச் 15-ம் தேதி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) மூலம் மதச் சார்பின்மையை சிதைக்கும், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பைத் தீவிரப்படுத்தும், இதன்வழி அரசியல் ஆதாயம் தேடும் மத்திய பாஜக அரசை கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் மார்ச் 15-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT