Published : 11 Mar 2024 05:50 AM
Last Updated : 11 Mar 2024 05:50 AM

பட்டு விவசாயிகள், நூற்பாளர்கள், விதைக்கூடு உற்பத்தியாளர்களுக்கு பரிசு: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

பட்டுவளர்ச்சித் துறையின் சார்பில், பட்டு விவசாயிகள், பட்டு நூற்பாளர்கள் மற்றும் விதைக்கூடு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் 12 விருதாளர்களுக்கு 9 லட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில், குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், பட்டுவளர்ச்சித் துறை இயக்குனர் சந்திரசேகர் சாகமுரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை: பட்டு வளர்ச்சிப் பணிகளை ஊக்குவிக்க, சிறந்த பட்டு விவசாயிகள், நூற்பாளர்கள், விதைக்கூடு உற்பத்தியாளர்கள் என 12 பேருக்குபரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த பட்டு விவசாயிக்கான முதல் பரிசாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை சேலத்தைச் சேர்ந்த க.ஜெயந்திக்கும், 2-ம் பரிசாக ரூ. 75 ஆயிரத்துக்கான காசோலையை திருப்பூரைச் சேர்ந்த மு. பூபதிக்கும், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை தென்காசியைச் சேர்ந்த வை. அருள்குமரனுக்கும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், சிறந்த தானியங்கி பட்டு நூற்பாளருக்கான ரூ.1 லட்சம் முதல் பரிசை கிருஷ்ணகிரியைச் சேர்ந் மு.முகமது மதீனுல்லாவுக்கும், 2-ம் பரிசாக ரூ.75 ஆயிரத்தை திருப்பூரைச் சேர்ந்த இரா.பெருமாளுக்கும், 3-ம் பரிசாக ரூ. 50 ஆயிரத்தை திருப்பூரைச் சேர்ந்த ஜெ. ராம்சங்கருக்கும் வழங்கினார். இதுதவிர, சிறந்த பலமுனை பட்டு நூற்பாளருக்கான முதல் பரிசு ரூ.1 லட்சத்தை தருமபுரியைச் சேர்ந்த மு.சாந்தமூர்த்திக்கும், 2-ம் பரிசாக ரூ.75 ஆயிரத்தை சேலத்தைச் சேர்ந்த நா.நாகராஜனுக்கும், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை தருமபுரியைச் சேர்ந்த ஜெ.வேதவள்ளிக்கும் வழங்கினார்.

மேலும், முதல் முறையாக மாநில அளவில் சிறந்த விதைக்கூடு உற்பத்தியாளருக்கு பரிசுகள்வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, கிருஷ்ணகிரியைச் சேர்ந்தசி.திலீப்குமாருக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், கி.கிருஷ்ணப்பாவுக்கு 2-ம் பரிசாக ரூ.75 ஆயிரம், நா.மஞ்சுநாதாவுக்கு 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரம் என 12 விருதாளர்களுக்கு ரூ. 9 லட்சம் பரிசுத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ. அன்பரசன், கைத்தறித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், பட்டு வளர்ச்சி இயக்குனர் சந்திரசேகர் சாகமுரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x