Published : 08 Mar 2024 07:16 AM
Last Updated : 08 Mar 2024 07:16 AM

தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடாத எஸ்பிஐ வங்கியை கண்டித்து தமிழகம் முழுவதும் 114 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோப்புப்படம்

சென்னை: தேர்தல் பத்திர ஊழலை மறைக்க பாரத ஸ்டேட் வங்கி மத்திய பாஜக அரசுக்கு துணைபோவதாக கூறி, பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை நுங்கம்பக்கம் கல்லூரி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை தலைமை அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது:

தேர்தல் பத்திரம் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பாரத ஸ்டேட் வங்கி பட்டியலை தேர்தல்ஆணையத்தில் கொடுக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதம் வழங்கஅவகாசம் கோரி உச்ச நீதிமன் றத்தில் பாரத ஸ்டேட் வங்கி மனுதாக்கல் செய்துள்ளது. நாட்டு மக்களுக்கு மத்திய பாஜக அரசின் மோசடிகள் தெரிந்து விடும் என்பதை மறைப்பதற்காக தான் அவ்வாறு செய்துள்ளது.

முதன்முதலில் கணினி மயமாக் கப்பட்ட வங்கி ,பாரத ஸ்டேட் வங்கிதான். மொத்தம் 22 ஆயிரத்து 217 பத்திரங்கள் குறித்த பட்டியலைத் தான் வழங்க வேண்டும். அதற்கு 4 மாதங்கள் அவகாசம் கேட்கிறது.

சீன நாட்டிலுள்ள நிறுவனங்களி டம் இருந்தும், வடகொரிய நிறு வனங்களிடமிருந்தும் பாஜகவுக்கு பணம் வந்திருப்பதாக தகவல் வருகிறது. தமிழகத்தில் நிவாரண தொகையாக ரூ.37 ஆயிரம் கோடிவழங்க வேண்டும் என்று மத்தியஅரசிடம் முதல்வர் கேட்டிருந்தார்.

இதுவரை ஒரு ரூபாய் கூட வரவில்லை. அதன் பிறகு எப்படி பிரதமர் மோடியால் தமிழகத்துக்கு வர முடிகிறது. பிரதமர் மோடி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. அவரை தமிழக மக்கள்தோற்கடிக்கும் காலம் வந்து விட் டது. இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோன்று தமிழகத்தில் கட்சி அளவிலான 64 மாவட்டங்களிலும், 50 ஒன்றியங்களிலும் என மொத்தம் 114 இடங்களில் பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத், முன்னாள் மாநிலத் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விஷ்ணு பிரசாத் எம்.பி, துணைத் தலைவர்கள் முருகானந்தம், கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளர்கள் செல்வம், அருள் பெத்தையா, தமிழ்ச்செல்வன், தளபதி பாஸ்கர், இலக்கிய அணி தலைவர்புத்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x