Published : 06 Mar 2024 10:28 AM
Last Updated : 06 Mar 2024 10:28 AM
மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி வைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த தேர்தலில் குறைந்தது இரண்டு தொகுதிகள் வேண்டும் என திமுகவிடம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.
திமுகவை பொறுத்தவரை மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு தொகுதியை காங்கிரஸ் மூலம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் குறைக்கப்படும் சூழல் இருப்பதால், இதற்கு காங்கிரஸ் ஒப்புக் கொள்வதும் சந்தேகம்தான்.
இந்நிலையில், மநீம அவசர கூட்டம்சென்னையில் தலைவர் கமல்ஹாசன்தலைமையில் நாளை (மார்ச் 7) நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் முதல்மாவட்ட நிர்வாகிகள் வரை பங்கேற்க வேண்டும் எனபொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...