Published : 12 Feb 2018 12:19 PM
Last Updated : 12 Feb 2018 12:19 PM
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் திமுக வழக்கறிஞர் வில்சன் முறையீடு ஜெயலலிதா படத்திறப்புக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் திமுக முறையீடு செய்துள்ளது.
முன்னதாக இன்று (திங்கள்கிழமை) காலை தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டது. 7 அடி உயரம் 5 அடி அகலம் கொண்ட அந்த படத்தை சபாநாயகர் தனபால் திறந்துவைத்தார்.
திமுக புறக்கணிப்பு..
ஜெயலலிதா படத்தை திறப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியையும் திமுகவினர் புறக்கணித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT