Published : 03 Mar 2024 07:47 PM
Last Updated : 03 Mar 2024 07:47 PM
மதுரை: மக்களவைத் தேர்தலில் 15 தொகுதிகளில் சிவசேனா போட்டியிடுவதென மதுரையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் சிவசேனா கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. தனியார் மண்டபத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் காமேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணி தலைவர் சாலைமுத்து, மகளிர் அணி செயலாளர் ஜெயா, மாநில முதன்மைச் செயலாளர் தண்டபாணி, பொதுச்செயலாளர் ஜெயக்குமார் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்: கர்நாடக சட்டமன்றத்தில் மேகதாது அணை கட்டுவோம் என, கூறிய கர்நாடக துணை முதல்வர் சிவகுமாருக்கு கண்டனம், தமிழ்நாட்டில் போதைப் பொருள் கலாச்சாரத்தை தடுக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் பெயர் வைக்க வலியுறுத்தல், மக்களவைத் தேர்தலில் 15 தொகுதிகளில் போட்டியிடுதல் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாநில பொது செயலாளர் ஜெயக்குமார் கூறுகையில், ''நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி சார்பில், 15 இடங்களில் போட்டியிடுவது குறித்து கூட்டத்தில் ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். வரும் 24ம் தேதி திருப்பூரில் நடக்கும் தென்மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்,'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT