Published : 03 Mar 2024 12:24 PM
Last Updated : 03 Mar 2024 12:24 PM
புதுச்சேரி: புதுச்சேரி தொகுதிக்கான வேட்பாளரை பாஜக அறிவிக்கும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி கண்டிப்பாக புதுச்சேரிக்கு வருவார் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
போலியோ சொட்டு மருந்து முகாமை புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி இன்று கதிர்காமம் அரசு பள்ளியில் தொடக்கி வைத்தார். புதுச்சேரியில் 63,853 குழந்தைகளும் காரைக்காலில் 12,257 குழந்தைகளும் மாஹே பகுதியில் 1,685 குழந்தைகளும் மற்றும் ஏனாம் பகுதியில் 3,539 குழந்தைகளும் மொத்தம் 81,334 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படவுள்ளது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ரங்கசாமி கூறியதாவது: "போலியோ சொட்டு மருந்து அவசியமானது. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து சுகாதாரத்துறை மூலம் போடப்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் பக்கவிளைவுகள் ஏற்படாது. குழந்தைகளுக்கான நோய்கள் தடுக்கப்பட்டு வருகிறது.
மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கி ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அவர்கள் வேட்பாளரை அறிவிப்பார்கள். போதைப்பொருளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெண் குழந்தை பிறந்தால் முகவரி, வங்கி எண் கொடுக்கப்பட்டவுடன் துறையானது நிதியை வைப்பு நிதியாக வைக்கிறோம். தரவில்லை என்று கூறுவது பொய்யான குற்றச்சாட்டு.தேர்தல் வருவதால் பிரதமர் பிரச்சாரத்துக்கு கண்டிப்பாக புதுச்சேரி வருவார்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT