Published : 14 Feb 2018 09:45 AM
Last Updated : 14 Feb 2018 09:45 AM
த
மிழை எழுத்து கூட்டிப் படிக்க தெரியாத பால பருவத்திலேயே, செவி வழியாய் கேட்ட சிவ புராணங்களை பாடத் தொடங்கினார் திருக்காமீஸ்வரன். தற்போது தேவாரம், திருவாசகம், 12 திருமுறைகள் என அனைத்தும் அத்துபடி.
அந்த ஆன்மிக சொற்பொழிவாளருக்கு வயது 8-தான் ஆகிறது. பள்ளி விடுமுறை நாட்களில் சொற்பொழிவு ஆற்றத் தொடங்கினால், அந்தக் குரலுக்கு மயங்காதவர் இல்லை.
புதுச்சேரி அருகேயுள்ள கூடப்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தன் - சங்கீதா தம்பதியரின் மகன்தான் இந்த திருக்காமீஸ்வரன். 3-ம் வகுப்பு படிக்கும்போதே இவரது அசாத்திய திறமை குறித்து தந்தை ஆனந்தன் நம்மிடம் பகிர்ந்தது:
மனைவி கர்ப்பமாக இருந்தபோது தினமும் வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வார். சிவபுராணம், கயிலாய இசையை அடிக்கடி கேட்பார். கடந்த 2009-ல் திருக்காமீஸ்வரன் பிறந்தான். அடிக்கடி தேவாரம், திருவாசகத்தை கேட்கத் தொடங்கினான். கேட்ட சிவபுராணத்தை பாடவும் செய்தான். அப்போது மூன்றரை வயதுதான்.
6 வயதில் திண்டிவனம் முரு கன் கோயிலில் தொடங்கிய சொற்பொழிவு தமிழகம், கர்நாடகம், மும்பை, ஹைதராபாத் என 120 இடங்கள் வரை நீண்டது. வரும் ஏப்ரலில் நேபாளம் செல்கிறான்” என்றார்.
இவருக்கு வந்த நன்கொடைகள் சேமிக்கப்பட்டு பொது காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. திருக்காமீஸ்வரர் கோயில் குடமுழுக்குக்கு ரூ.85 ஆயிரம், வில்லியனூர் ரயில் நிலைய நடைமேடை மேற் கூரைக்கு ரூ. 1 லட்சம் என கொடுக்கப்பட்டது. திருக்காமீஸ்வரனிடம் பேசினோம்.. “புராணக் கதைகள் கேட்பது ரொம்ப பிடிச்சிருக்கு. காதுல கேட்கிறதை அப்படியே சொல்வேன். கோர்வையாக சொல்வதால் அது மத்தவங்களுக்கு பிடிச்சிருக்கு. கேட்பதை மத்தவங்களுக்கு பிடிச்ச மாதிரி சொல்றதெல் லாம் அந்த ஈசனோட அருள் தான்’’ என்கிறார் மழலைக் குரலில் தீர்க்கமாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT