Published : 22 Feb 2024 05:16 AM
Last Updated : 22 Feb 2024 05:16 AM
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய துணைக்குழு அமைத்து அர சாணை வெளியிடப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் காலாவதியானது. இதனால் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைத் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்தன.
இந்நிலையில், 15-வது ஊதியஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் நிர்வாகம் தரப்பில் பங்கேற்க நிதித்துறைச் செயலர், 8 போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலக தனி அலுவலர் உள்ளிட்ட 14 பேர் கொண்ட குழுவை அமைத்து கடந்த 6-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தைக் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்யும் வகையில் துணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டிபிறப்பித்த அரசாணையில், ``15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக் குழுவின் பரிந்துரையை ஆய்வு செய்ய நிதித்துறைச் செயலர், சென்னை மாநகரம், விரைவு, சேலம் போக்குவரத்துக் கழகங்களின் மேலாண்இயக்குநர்கள், மாநகர போக்குவரத்துக் கழக தலைமை நிதி அலுவலர் ஆகிய 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது'' எனக் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT