Published : 07 Aug 2014 09:29 AM
Last Updated : 07 Aug 2014 09:29 AM

கடப்பாவில் என்கவுன்ட்டர்: தமிழக தொழிலாளர்கள் 2 பேர் பலி

ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரக் கடத்தல் தொழிலா ளர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே புதன்கிழமை நடந்த மோதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

செம்மரக் கடத்தலில் ஈடுபடு வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும் கடத்தல்காரர்கள், கூலித் தொழிலாளர்களை பகடைக் காய்களாக பயன்படுத்தி வருகின் றனர். இதனால் அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழக்கும் பரிதாப சம்பவங்கள் நடக்கின்றன.

கடப்பா மாவட்டம் ஓபுலவாரி பல்லி மண்டலம் காதேலு வனப்பகுதியில் புதன்கிழமை காலை நூற்றுக்கும் மேற்பட்ட செம்மரக் கடத்தல் கும்பல் மரங்களை வெட்டிக் கடத்துவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் ஆயுதம் ஏந்திய போலீஸார் அப்பகுதிக்குச் சென்றனர். போலீஸாரைக் கண்ட கடத்தல் கும்பல், அவர்கள் மீது கற்களை வீசியும், கோடாலியாலும் தாக்குதல் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து, கடத்தல் கும்பல் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் இறந்தனர். இவர்களைப் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் சமீபத்தில் போலீஸாருடன் நடைபெற்ற மோதலில் நான்கு பேரும், கடப்பா அருகே நடந்த மோதலில் ஒருவரும் இறந்தனர். இந்நிலையில் புதன்கிழமை மேலும் இருவர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x