Published : 17 Feb 2024 10:20 AM
Last Updated : 17 Feb 2024 10:20 AM
விசிகவில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடந்து வரும் நவீனத்துவ மாற்றங்களுக்கு பின்னணி நபராக அறியப்பட்டவர் ஆதவ் அர்ஜூனா. தேர்தல் வியூக வகுப்பு நிறுவனமான வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் தலைவரான அவர், அண்மையில் திருச்சியில் நடைபெற்ற ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டில் விசிகவின் அடிப்படை உறுப்பினராக இணைந்தார்
. இந்நிலையில், சென்னையில் உள்ள விசிக தலைமையகத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற உயர்நிலைக்குழு கூட்டத்தில், ஆதவ் அர்ஜூனாவுக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அவரை விசிக சார்பில் பொதுத் தொகுதியில் போட்டியிட வைக்கவும் தலைமை திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே, கடந்த 12-ம்தேதி திமுகவுடனான பேச்சுவார்த்தையில் குறைந்தபட்சம் 2 தனித் தொகுதியும் ஒரு பொதுத் தொகுதியும் வழங்க வேண்டும் என விசிக உறுதியாக தெரிவித்தது.
அதன்படி, பெரம்பலூர் அல்லது கள்ளக்குறிச்சியில் ஏதேனும் ஒரு தொகுதியில் ஆதவ் அர்ஜூனா நிறுத்தப்படலாம் என தெரிகிறது. லாட்டரி அதிபர் மார்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனா என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT