Published : 14 Feb 2024 10:16 AM
Last Updated : 14 Feb 2024 10:16 AM
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜகவுக்கு கணிசமான வாக்கு வாங்கி கொண்டது. தற்போது காங்கிரஸை சேர்ந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் இத்தொகுதி எம்.பி.யாக உள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியை காங்கிரஸ் தக்க வைக்குமா அல்லது பாஜக வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. காங்கிரஸ் சார்பில் மீண்டும் விஜய்வசந்த்துக்கே சீட் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம், 3 முறை விளவங்கோடு தொகுதியில் எம்எல்ஏவாக தொடர் வெற்றிபெற்ற விஜயதரணி, இம்முறை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தனக்கு எம்.பி. சீட் வழங்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், அதுகுறித்து எவ்வித தகவலும் காங்கிரஸ் தரப்பில் இல்லாத நிலையில், பிரதமர் மோடி முன்னிலை யில் விஜயதரணி பாஜகவில் இணையப் போவதாகவும், அவர் குமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடப் போவதாகவும் வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைதளங்களில் வைரலானது.
குமரி காங்கிரஸ் வட்டாரத்தினர் கூறும்போது, ‘விஜயதரணி பாஜகவில் இணையப் போவதாக கூறுவது தவறான தகவல். தேர்தல்தோறும் இதுபோன்ற சர்ச்சை வருவது இயல்புதான்’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT