Published : 12 Feb 2024 04:37 PM
Last Updated : 12 Feb 2024 04:37 PM

இறுதிச்சடங்கு செய்திட நீர்த் தொட்டி கோரி துண்டு, செம்புடன் மனு கொடுக்க வந்தவரால் பரபரப்பு @ மதுரை 

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சமூக ஆர்வலர் தாண்டிக்குடி கணேஷ்பாபு சட்டையின்றி துண்டு செம்புடன் மனு அளிக்க வந்தவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: இறுதிச்சடங்கு செய்வதற்கு குளியல்தொட்டி கோரி துண்டு, செம்புடன் மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு சமூக ஆர்வலர் கணேஷ்பாபு சட்டையின்றி துண்டு, செம்புடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.பின்னர் சோதனை செய்து மனு அளிக்க அனுப்பிவைத்தனர். பின்னர் அவர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

அம்மனுவில், 'வாடிப்பட்டி அருகே முள்ளிப்பள்ளத்தில் இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கு செய்வதற்கு உள்ளூரிலுள்ள வடக்குதெரு அய்யனார் கோயிலிலுள்ள குளியல் தொட்டியிலிருந்து நீர்மாலை எடுத்து வருவது வழக்கம். அந்தக் குளியல் தொட்டியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிதாக குளியல் தொட்டி கட்டுவதற்கு பழைய குளியல் தொட்டியை இடித்தனர்.

கடந்த வாரம் எனது உறவினர் இறந்ததால் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக நீர்மாலை எடுக்கச் சென்றனர். அப்போது குளியல் தொட்டி இல்லாமல் குடிநீர் குழாயில் நீர்மாலை எடுத்து வரவும், அவர்கள் குளிப்பதற்கு மக்கள் சிரமப்பட்டனர். எனவே, தாமதமின்றி குளியல் தொட்டி கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தார். அதேபோல் மேலும் பல கோரிக்கைகளையும் கணேஷ்பாபு ஆட்சியருக்கு அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x