Published : 09 Feb 2024 05:28 AM
Last Updated : 09 Feb 2024 05:28 AM
சென்னை: தமிழகத்தில் வழக்கமாக தைமாதம் முடிந்து மாசி மாத பிற்பகுதியில், அதாவது மார்ச் மாதத்தில் வெப்பநிலை உயரத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே வெயிலின் அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஈரோட்டில் நேற்று முன்தினம் (பிப். 7) 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக சென்னைவானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது: தற்போது வானில் மேகங்கள் குறைந்துவிட்டன. ஈரப்பதம் குறைந்து, கடல் காற்று வீசுவதும்குறைந்துவிட்டது. அதனால், தற்போதே வெப்பம் உயர்ந்து வருகிறது. இம்மாதம் தமிழகத்தில் வழக்கத்தைவிட வெப்பம் சற்று அதிகமாகவே இருக்கும். கடலோர மாவட்டங்களில், குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 வாரங்களுக்கு வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வுமைய இயக்குநர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT