Published : 08 Feb 2024 06:28 PM
Last Updated : 08 Feb 2024 06:28 PM

அமலாக்கத் துறை சோதனையிட்ட தொழிலதிபர் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமலாக்கத் துறை சோதனைக்கு உள்ளான பிரபல கட்டுமான தொழிலதிபர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் செயல்ப்பட்டு வரும் பிரபல கட்டுமான நிறுவனமான, ஓசேன் லைஃப் ஸ்பேஷஸ் (OCEAN LIFE SPACES) நிறுவனத்தை எஸ்.கே பீட்டர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் ஒன்றாக இணைந்து தொடங்கினர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், நிறுவனத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கை ஸ்ரீராம், எஸ்.கே பீட்டரிடம் கேட்டதாகவும் இதற்கு எஸ்.கே பீட்டர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து எஸ்.கே. பீட்டர் மீது, ஸ்ரீராம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.கே.பீட்டர் மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸார் 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இந்த விவகாரத்தில் சுமார் 50 கோடி வரை பணபரிமாற்றம் நடத்ததாக புகார் எழுந்த நிலையில், இதை அடிப்படையாக வைத்து சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதா என அமலாக்கத் துறை அதிகாரிகள் கட்டுமான நிறுவன அதிபர் எஸ் கே பீட்டர் நிறுவனம் மற்றும் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், தங்களுக்கு இடையே சமசரம் ஏற்பட்டுவிட்டதால், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.கே. பீட்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்களுக்கு இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதாக ஸ்ரீராம் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, எஸ்.கே.பீட்டர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x