Published : 06 Feb 2018 09:33 AM
Last Updated : 06 Feb 2018 09:33 AM
தி
ருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியிலுள்ள குக்கிராமம் பூமலூர். ஓங்கி ஒலிக்கும் விசைத்தறி சத்தத்தில் கிராமத்தின் உழைப்பு மனதை நெய்கிறது. ஊரின் கலங்கரையாக இருக்கிறது அரசு உயர் நிலைப்பள்ளி. மைதானம் கூட இல்லாத நிலையில், விளையாட்டில் பல சாதனைகளை ஈட்டும் ஆச்சரியப் பள்ளி இது.
6 முதல் 10-ம் வகுப்பு வரை 228 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர் விசைத்தறி கூலித் தொழிலாளிகள். டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கும் இந்தப் பள்ளி மாணவர்கள், தொடர்ச்சியாக வெற்றியை ஈட்டுகிறார்கள். முன்னாள் தலை மை ஆசிரியை ராஜலட்சுமியின் முயற்சியால்தான் இது சாத்தியம் என்கின்றனர் ஆசிரியர்கள்.
அறிவியல் சோதனைக் கூடத் தில் உள்ள மர டேபிளைக் கொண்டு, ஆரம்பத்தில் விளையாடத் தொடங்கினார்கள். டென் னிஸ் ஃபோர்டு வாங்குவதற்கான நிதி இல்லை. குழந்தைகளின் ஆர்வத்தை மட்டும் முதலீடாக்கி தொய்வில்லாத பயிற்சி, கூர்மையான மதிநுட்பம், சமயோசிதமாக யோசிப்பால் ஜொலிக்கிறார்கள். மாணவர்களின் ஆர்வத்தை அறிந்த ஆசிரியர் செல்வகுமார், டேபிள் டென் னிஸ் பற்றி கற்றுக்கொடுத்தார். ஆண்டு முழுவதும் எடுத்துக் கொண்ட பயிற்சியால், போட்டிகளுக்குச் செல்லும் அளவுக்கு 35 பேர் தயாராகி உள்ளனர். தற்போது முதல்வர் கோப் பை, மாவட்ட அளவிலான போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றியை அள்ளுகின்றனர். அரசுப் பள்ளிகளுக்கு இடையே திருப்பூர் மாவட்ட அளவில் நடந்த போட்டியில்,14 வயது உட்பட்டோருக்கான பிரிவில் 8-ம் வகுப்பு மாணவன் வேல்முருகசாமி வெற்றி பெற்றுள்ளார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ) யோகேஷ் கண்ணா கூறும்போது, ‘தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வருகிறோம். ஆசிரியர் செல்வகுமார், உடற்பயிற்சி ஆசிரியர் சிவசாமி, பகுதிநேர ஆசிரியர் கில்பர்ட், தன்னார்வலர் சாமுவேல் ஜான்சன் ஆகியோர் குழந்தைகளுக்கு அளித்த ஆதரவே, தொய்வின்றி விளையாட முக்கியக் காரணம்’ என்றார்.
டேபிள் டென்னிஸ் ஃபோர்டு மட்டுமின்றி, தரமான பேட் கூட இவர்களிடம் கிடையாது. தற் போது பிளைவுட் ஃபோர்டை தயார் செய்திருக்கிறார்கள். முன் னாள் மாணவர்களும் பொருளாதார ரீதியாக உதவியுள்ளனர்.
“சில ஆண்டுகளுக்குள், இந்த விளையாட்டில் எங்கள் மாணவர்கள் தேசிய அளவில் சாதிப்பார்கள்” என்கிறார்கள் ஆசிரியர்கள். வாழ்த்துவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT